நாமக்கல் கவிஞர் அவர்கள் எழுதிய "மலைக்கள்ளன்' என்ற கதை (நாவல்) 1954 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதில் எம். ஜி. ராமச்சந்திரன் (M.G.R) மற்றும் பானுமதி நடித்து இருதனர். கலைஞர் மு. கருணாநிதி வசனம் எழுதி இருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ் திரைப்படம் இதுவே. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்தது.